இலங்கை ஒலிபரப்புத் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை நடாத்திய அறிவுக் களஞ்சிய போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி முதலாமிடம் பெற்றுக்கொண்டது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள சுமார் 12 பாடசாலைகள் கலந்துகொண்ட குறித்த அறிவுக் களஞ்சிய போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி முதலாமிடம் பெற்றுக்கொண்டமைக்கு ஊர் மக்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்று நடைபெற்ற போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி பண்டாரவளி பாடசாலையுடன் மோதி தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது.
அதனைத் தொடர்ந்து சிலாவத்துறை பாடசாலையுடன் இடம்பெற்ற விறுவிறுப்பான போட்டியிலும் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி அதீத திறமையை வெளிப்படுத்தி வெற்றியீட்டிக்கொண்டதுடன், அதனை அடுத்து வேப்பங்குளம் பாடசாலையுடனும் மோதி சிறப்பு வெற்றியை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மன்னார் தாராபுரம் பாடசாலை மற்றும் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கிடையில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில், எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சிறப்பான வெற்றியை பதிவுசெய்து மன்னார் மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்று மகுடம் சூடிக்கொண்டது.
இதேவேளை வட மாகாண மட்ட போட்டிகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளதுடன், குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி பங்குகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
