முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று காலை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை, சுற்றுலா மேம்பாட்டு பணியகம், இலங்கை விருந்தகங்கள் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை மாநாட்டுப் பணியகம் ஆகிய நான்கு நிறுவனங்களின் ஊழியர்களுக்கான நேரடி மருத்துவக் காப்பீட்டிற்கு, சட்டவிரோதமான முறையில் ஒரு தரகு நிறுவனத்தை நியமித்து, அந்தத் தரகு நிறுவனம் மூலம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடமிருந்து ரூபா சுமார் 47.5 இலட்சம் ரூபாயை தரகாக பெற்றதாக கூறப்படுகிறது.
இந்தச் செயலால், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


