முன்னாள் அமைச்சர் பி.தயாரத்ன தனது 89ஆவது வயதில் காலமானார்.
அவர் 2001 முதல் 2004 வரை சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நலன்புரி அமைச்சராகப் பணியாற்றினார்.
1936 அக்டோபர் 1 ஆம் திகதி பிறந்த அவர், 1977 பொதுத் தேர்தலில் அம்பாறை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.