- முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ அதிரடி கைது! சற்றுமுன்னர் ஆணைக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்ட பரபரப்பு
- வீட்டில் வைத்து 2 மணிநேர விசாரணை: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பிடியில் சிக்கிய ஷிராந்தி ராஜபக்ஷ
- சிரிலிய சவிய கணக்கு மோசடி சர்ச்சை: மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி கைது!
இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள முக்கிய திருப்புமுனையாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் நாட்டின் முன்னாள் முதற்பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டுள்ளார்.
இன்று (7) முற்பகல் வேளையில் கிருலப்பனையிலுள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாகச் சென்ற இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள், தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக அங்கு தொடர்ச்சியாக வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்ட நிலையில், நிலமை திடீரென மாறியது.
விசாரணைகளின் முடிவில், அதிகாரிகளால் அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பல வருடங்களாகப் பேசப்பட்டுவந்த ‘சிரிலிய சவிய’ கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இந்தத் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ள அவரிடம், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்கான மேலதிக விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த திடீர் கைதைத் தொடர்ந்து நாட்டின் அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.


