முருங்கன் மகளிர் மற்றும் சிறுவர் பணியகம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.
மன்னார் – சிறுவர் மற்றும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் காக்கும் நோக்கத்துடன், முருங்கன் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட புதிய சிறுவர் மற்றும் மகளீர் பணியகம் கடந்த 2025 அக்டோபர் 29 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இத்திறப்புவிழா வடக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. திலக் சி.ஏ. தனபால அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இப்புதிய வசதி ஜப்பான் அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் பொது நிதி தொகை மற்றும் இலங்கை அரசின் இணை ஒத்துழைப்புடன் வேர்ல்ட் விஷன் (World Vision) அமைப்பின் பங்களிப்பில் நிறுவப்பட்டுள்ளது.
இப்பணியகத்தின் மூலம், முருங்கன் மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளிலுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, ஆதரவு மற்றும் நீதியுரிமை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொலிஸ் துறையின் பிரதான நோக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக வாழக்கூடிய சமூகத்தை உருவாக்குவதே ஆகும். இத்தகைய புதிய வசதிகள், சமூக நீதி மற்றும் மனிதாபிமானப் பணிகளை நடைமுறைப்படுத்துவதில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகின்றன.




