Sponsored Advertisement
HomeWorld Newsமுஸ்லிம்களுக்கு பயத்தை காட்டிய டிரம்ப்!

முஸ்லிம்களுக்கு பயத்தை காட்டிய டிரம்ப்!

நான் பதவியேற்று 2 வாரங்களுக்குள் பிணைக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கும்’ என ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் கெடு விதித்தார்.

அமெரிக்கா அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். அவர், ‘நான் அதிபராக பதவியேற்ற 24 மணிநேரத்தில் உக்ரைன், ரஷ்யா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்’ என சபதம் விடுத்தார். தற்போது, அவர் வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். அனைத்து ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவர் ”நான் பதவியேற்று 2 வாரங்களுக்குள் பிணைக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கும்’ என கெடு விதித்தார். அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:

இது ஹமாஸுக்கும் நல்லதல்ல. இனி நான் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே, பிணைக்கைதிகளை விடுதலை செய்து இருக்க வேண்டும். அவர்கள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடந்தி இருக்கக் கூடாது. ஆனால் பலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து பலர் என்னை அழைத்து, பிணைக்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கெஞ்சுகிறார்கள்.

அமெரிக்காவிலிருந்து சிலரைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது தாய்மார்கள் என்னிடம் வந்து கதறி அழுதனர், பேச்சுவார்த்தையை காயப்படுத்த நான் விரும்பவில்லை. நான் பதவியேற்று இரண்டு வாரங்களுக்குள் பிணைக்கைதிகளை விடுக்க ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version