Thursday, May 15, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsயாழில் ஆரம்பமான ஊர்திப் பவனி!

யாழில் ஆரம்பமான ஊர்திப் பவனி!

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக நேற்று காலை ஊர்திப் பவனி ஆரம்பமாகியது.

குறித்த ஊர்திப் பவனி இன்று கிளிநொச்சிக்கு வந்தடைந்ததுடன், பரந்தன், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அஞ்சலிக்காக தரித்திருந்தது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்திப் பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊர்திபவனி வடக்கை சேர்ந்த ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.

“தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் இறுதி போரின் சாட்சியங்கள் என்பன குறித்த வாகனத்தில் காட்சி படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வாகன பவனி வடக்கின் சகல மாவட்டங்களுக்கும் பயணிக்கும் போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular