யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு பாரிய கோர விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், நாவற்குழி மாதா கோவிலடியிலே குறித்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதியே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சிக்கிய வாகனத்தில் மூவர் இருந்ததுடன், அவர்கள் அனைவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கனடாவில் இருந்து வந்த பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் 5வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஆகியோர் குறித்த காரில் பயணித்தபோதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்கு காரணம் நித்திரை கலக்கமே என விபத்தில் சிக்கியவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்
