“மவத்ததா வ ரஹ்மா” (பாசம் மற்றும் கருணை) எனும் தொனிப்பொருளின் கீழ் இரண்டாவது பிரம்மாண்ட திருமண நிகழ்வு கௌரவ திரு. நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியுதீன் தலைமையில் கடந்த 2025 அக்டோபர் 7 ஆம் தேதி வவுனியாவில் நடைபெற்றது.
இலங்கையில் முதன்முறையாக நடைபெற்ற இந்த வரலாற்று நிகழ்வில், இலங்கையின் பல்வேறு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், இரக்கம் மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் 20 பௌத்த, கத்தோலிக்க மற்றும் இந்து ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டது.
ஒவ்வொரு ஜோடிக்கும் அவர்களின் புதிய வாழ்க்கையை கண்ணியத்துடன் தொடங்க நிதி உதவியும் வழங்கப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஸ்தாபகத் தந்தை மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானின் நினைவாக இந்த நீதி பங்களிப்பை ஷேக் மஹ்மூத் ஃபதே அப்துல்லா அல் கஜே வழங்கிவைத்தார்.
வவுனியாவில் சர்வமத நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து முக்கிய மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள் விழாவில் பங்கேற்று, தங்கள் ஆசீர்வாதங்களையும் ஒற்றுமையின் செய்திகளையும் வழங்கினர். இந்த நிகழ்வில் வண. மிகிந்தலே தேரர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார், இது அனைத்து சமூகங்களுக்கிடையில் அமைதியான சகவாழ்வின் உணர்வைக் குறிக்கிறது.
“மவத்ததா வ ரஹ்மா” திட்டம் முதன்முதலில் 2025 ஆகஸ்ட் 24 அன்று புத்தளத்தில் தொடங்கப்பட்டது, அங்கு ஒரே தடவையில் 20 முஸ்லிம் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். அந்த தொடக்க விழாவில் இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதர் மாண்புமிகு காலித் நாசர் அல் அமேரி பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த முயற்சியின் மூலம், கௌரவ ரிஷாத் பதியுதீன் சமூக நல்லிணக்கம், மதங்களுக்கு இடையேயான ஒற்றுமை மற்றும் இரக்கத்தை மேம்படுத்துவதையும், அனைத்து தரப்பு இளம் தம்பதிகளுக்கும் நடைமுறை ஆதரவை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார், இது செயலில் பாசம் மற்றும் கருணையின் உண்மையான பிரதிபலிப்பாகும்.



