சமீபத்தில் வெளியிடப்பட்ட ரூ.2000 நினைவு நாணயத்தாள் படிப்படியாக அனுமதி பெற்ற வணிக வங்கிகள் மூலம் புழக்கத்தில் விடப்படும் என இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடந்த ஒகஸ்ட் 29ஆம் திகதி ரூ.2000 நினைவு நாணயத் தாளை வெளியிட்டது.
புதிய நாணயத்தாள் சீராக ஏற்றுக்கொள்ளப்பட்டு விநியோகிக்கப்படுவதை எளிதாக்கும் வகையில், அனுமதி பெற்ற வணிக வங்கிகள் தங்கள் பணத்தைக் கையாளும் இயந்திரங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.
செயல்முறையின் வேகத்திற்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் படிப்படியாக உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் புழக்கத்தில் விடப்படும்.
அளவீட்டு செயல்முறை முடிந்ததும், புதிய நாணயத்தாள் அனைத்து வங்கி வழிமுறைகளிலும் தடையின்றி பயன்படுத்தப்படும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.