கிளிநொச்சியில் முறைகேடான அதிபர் நியமனம் வழங்கப்பட்டதாக தெரிவித்து இன்றைய தினம் 14.08.2025 இலங்கை சிவசேன அமைப்பு மற்றும் திரு. மாதவன் அவர்கள் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த ஊடக சந்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வட மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சீன் செயலாளரால் 2025.03.04. திகதி இடப்பட்ட கடிதப்பிரகாரம், வடமாகாணத்தின் 7 பாடசாலைகளுக்கு அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
அவற்றுள் கிளி/ சென்திரேசா மகளிர் கல்லூரியும் ஒன்றாகும் (IAB). குறித்த பாடசாலைக்கு அதிபர் தரம் Iஐ சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
அதிபர் தரம் 1ஐ சேர்ந்தவர்கள் இருவரும், அதிபர் தரம் 2-1ஐ சேர்ந்தவர்கள் இருவரும், அதிபர் தரம் IIIஐ சேர்ந்தவர்கள் இருவருமாக அறுவர் கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் இருந்து விண்ணப்பித்து இருந்தனர். (இணைப்பு | கிளிநொச்சி தெற்கு வலய RTI தகவல்)
யாழ் கல்வி வலயத்தில் இருந்து யா/ ஸ்ரீ சோமஸ்கந்தா இந்து ஆரம்பப் பாடசாலை அதிபர் திருமதி தேவகுமார் உதயகலா மட்டும் விண்ணப்பித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (இணைப்பு || யாழ் கல்வி வலய RTI தகவல்)
எனினும் தற்பொழுது கிளி/ சென்திரேசா மகளிர் கல்லூரிக்கு நியமிக்கப்பட்டுள்ள, யாழ்/ நல்லூர் சென்பெனடிக் றோ.க.த.க. வித்தியாலய அதிபர் அருட்சகோதரி மரியவசந்தி யாழ் கல்வி வலயத்தில் இருந்து விண்ணப்பித்து இருந்தமைக்கான எவ்வித ஆதாரங்களும் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நேர்முகத் தேர்வுப் பட்டியலில் அருட்சகோதரி மரியவசந்தியின் பெயர் இடம் பெற்றுள்ளதுடன், புள்ளிகள் இடப்பட்டுள்ளன.
மேலும் நேர்ர்முகத் தேர்வுக்கு அழைப்புக் கடிதம் செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், புள்ளிகள் அடிப்படையில் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (இணைப்பு III RTI தகவல் மாவட்ட கல்வி அமைச்சு)
இத்தகைய தகவல்களின் அடிப்படையில் பின்வரும் வினாக்களை சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து நாம் கேட்க விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.
- விண்ணப்பித்திருக்காத அதிபர் ஒருவரை நேர்முகத் தேர்வுக்கு எந்த அதிபர் நியமன சுற்று நிருபப் பிரகாரம் செயலாளர் அழைத்துள்ளார்?
- அதிபர் பதவிக்கு விண்ணப்பித்திருக்காத ஒருவரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் அதிகாரத்தை செயலாளருக்கு யார் வழங்கியது?
- இந்த முறைகேடான கல்வி நிர்வாக செயற்பாட்டின் மூலம் நேமுகத் தேர்வுக்கு அழைக்காது புறக்கணிக்கப்பட்டுள்ள அதிபர் தரம் 1,2 – 11 வகையைச் சேர்ந்த தகுதியான அதிபர்களின் தொழில் கௌரவம், தொழில் உரிமை மீறப்பட்டிருப்பதற்கு யார் பொறுப்புக் கூறுவது?
- ஒரு IAB பாடசாலைக்கு அதிபர் தரம் Iஐ சேர்ந்தவர்களே நியமிக்கப்பட வேண்டும் என 2023/3 இலக்க சுற்று நிருபம் தெரிவிக்கின்ற போது, குறித்த சுற்றுநிருபத்தை மீறி தரம் III அதிபரை எவ்வாறு நியமிக்க முடியும்? GCE O/L கல்வித்தரம் உடைய அதிபரினால் IAB பாடசாலை ஒன்றை நடாத்த முடியுமா? அறிவு குறைவான அதிபரின் செயற்பாடுகள் மாணவர் கல்வியை பாதிக்காதா?
- 2023/3 1.10 சுற்றுநிருபப் பிரகாரம் மிகை அதிபர் அணி என தரம் I, II அதிபர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பது படுமோசமான முறைகேடாகும். காரணம் 2012.10.05 இல் இருந்து மேற்குறித்த மிகை அதிபர் அணி என்பது நீக்கப்பட்டு இவர்களுக்கும் இடமாற்றங்கள், பதவியுயர்வுகள் வழங்கலாம் என நிரல் அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிந்திருக்கவில்லையா? அத்தகைய ஒருவர் செயலாளராக பதவி வகிக்கலாமா?
- குறித்த அருட்சகோதரியை குறித்த பாடசாலைக்கு திட்டமிட்ட வகையில் முறைகேடாக, அவசர அவசரமாக நியமித்ததன் மர்மமான பின்னனி என்ன? குறித்த பாடசாலையில் முன்னைய அதிபரினால் மேற் கொள்ளப்பட்டுள்ள ஊழல் மோசடிகளை மூடி மறைப்பதற்காகவா? என எண்ணத் தோன்றுகிறது.
- 95% இந்துசமய பிள்ளைகளைக் கொண்டுள்ள குறித்த பாடசாலைக்கு தகுதியினமான தரம் II அதிபரை நியமித்ததன் திட்டமிடப்பட்ட பின்னனி யாது?
- இத்தகைய முறைகேடான, கல்வி நிரவாகச் சட்டத்திற்கு விரோதமான அதிபர் நியமனத்தை மேற் கொள்வதற்கு பின்னால் இருப்பவர்கள் யாவர்?
மேற்படி வினாக்களுக்கான விடைகளைத் தேடும் போது வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரது முறைகேடான கல்வி நிர்வாக செயற்பாடுகள், கல்வி நிர்வாக சட்ட மீறல்கள், அவரது கள்ளத்தனங்கள், கபடத்தனங்கள், மதவாத அடிப்படையிலான செயற்பாடுகள் வெளிவரும் என என்னுகின்றோம்.
எனவே குறித்த முறைகேடான அதிபர் நியமனம் தொடர்பில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிவாரணங்களை வழங்குமாறு வடமகாகாண ஆளுநர், பிரதம செயலாளர் என்ற வகையில் தயவுடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கின்றோம்.
- கிளி/ சென்திரேசா மகளிர் கல்லூரிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் தகுதியீனமான அதிபரை அகற்றி தகுதியான அதிபரை நியமிக்க பொருத்தமான நடவடிக்கையை மேற்கொண்டு உதவுக.
- 95% இந்துசமய பிள்ளைகளை உடைய குறித்த பாடசாலைக்கு இந்து சமயம் சார்ந்த அதிபரை நியமனம் செய்து உதவுக.
- 2023/3 சுற்றுநிருபப் பிரகாரம் தரம் 1ஐ சேர்ந்த அதிபரை நியமித்து உதவுக.
- மதவாத அடிப்படையில் முறைகேடாகவும், பக்கச் சார்பாகவும், திட்டமிட்ட வகையில் செயற்பட்டு அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ள செயலாளர் மீது இலங்கை தாபன விதி கோவை 2ம் தொகுதியின் 48ம் அத்தியாயத்தின் 13.1 பிரிவின் கீழ் முறையான ஒழுக்காற்று விசாரணையை மேற் கொண்டு நீதி வழங்கவும்.
- அவ்வாறே செயலாளரின் சட்ட மீறல்களுக்கு துணை நின்ற அருட்சகோதரி மீதும் வலயப் பணிப்பாளர்கள் மீதும் முறையான ஒழுக்காற்று விசாரணையை மேற்கொண்டு தண்டனை வழங்கும்.
- இத்தகைய குளறுபடிகள் செய்து முறைகேடான கல்வி நிர்வாகத்தை மேற் கொண்டுள்ள செயலாளரின் சுயவிபரக் கோவையை பரிசீலித்து கல்வித்தமைகள், தொழிற் தகமைகளை உறுதிப்படுத்த பொருத்தமான நடவடிக்கைகளை மேற் கொள்ளவும்.
- அவ்வாறே GCE O/L தரத்துடன் அதிபர் தரம் IIIஐ சேர்ந்த அருட்சகோதரி மரியவசந்தியின் சுயவிபரக்கோவையில் உள்ள கல்வித்தரம், தொழிற்தரம், சான்றிதழ்களையும் பரிசீலித்து போலியானதா? சரியானதா? என உறுதிப்படுத்தவும். நேர்முகத் தேர்வில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் பரிசீலிக்கவும்.
- வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரது கல்வி நிர்வாக முறைகேடுகள், கல்வி நிர்வாக சட்ட மீறல்கள் உறுதிப்படுத்தப்பட்டு குற்றவாளியாக காணப்படும் பட்சத்தில் அவரது பதவியினை சட்டப்படி பறித்து வெறிதும் வெற்றும் ஆக்குவதற்கு பொருத்தமான சட்ட நிடவடிக்கையை மேற் கொண்டு உதவுக.
- எல்லாவற்றுக்கும் மேலாக தகுதி இருந்தும் மதவாத அடிப்படையிலும் கபடத்தனமாகவும் செயலாளரினால் நிராகரிக்கப்பட்டு பாதிக்கப் பட்டுள்ள தரம் I,II அதிபர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க ஆவன செய்யவும். என தெரிவித்தனர்
