இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனு இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவை செலுத்தியிருந்தார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன இன்றைய தினம் கிளிநொச்சியிலுள்ள மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினர்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக மாவட்ட அமைப்பாளர் மரியசீலன் அவர்களும் தேசிய மக்கள் சக்தி சார்பாக கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் அவர்களும் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

