Sponsored Advertisement
HomeWorld Newsவட்ஸ்எப்பில் மோசடி அழைப்புகள்!

வட்ஸ்எப்பில் மோசடி அழைப்புகள்!

“வட்ஸ்எப் மெசேஞ்சர்” தளத்தை மீண்டும் குறி வைத்து மோசடியாளர்கள் பயனர்களின் தரவுகளை களவாடுவதற்கு முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.
மோசடியாளர்கள் ‘+84, +62, +60, +234’ மற்றும் பல நாடுகளின் இலக்கங்களில் இருந்து அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை மேற்கொண்டு பயனர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதிலிருந்து பயனர்கள் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று சமூக ஊடக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த காலங்களில் இதே போன்று மோசடிகளுக்கு வட்ஸ் எப் தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஏனெனில் இந்த தளத்தின் மூலம் பயனர்களை தொடர்பு கொள்வது எளிது என்பதாகும்.
அதன் ஊடாக தங்கள் கைவரிசையை மோசடியாளர்கள் இலகுவாக காண்பிக்க முடியும்.
இந்த நிலையில் மாதந்தோறும் சுமார் 2 பில்லியன் செயற்படு பயனர்களை கொண்டுள்ள வட்ஸ் எப் தள பயனர்கள் மீண்டும் மோசடி அழைப்புகளை பெற்று வருகின்றனர்.
இப்போதைக்கு மலேசியா, வியட்நாம், நைஜீரியா, கென்யா, எத்தியோப்பியா போன்ற நாடுகளின் இலக்கங்களில் இருந்து இந்த அழைப்புகள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அழைப்புகள் ஏன் வருகின்றன என்பது தெரியவில்லை. சிலருக்கு வேலைவாயப்பு சார்ந்த செய்திகளும் வருகின்றன. அதனால் பயனர்கள் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Exit mobile version