வட மாகாண சபரிமலை யாத்திரிகர்கள் இணையம் நடாத்தும் மாபெரும் மாநாடும் மகாகுரு ரவிசுவாமியின் கௌரவிப்பு நிகழ்வும் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று நடைபெறுகின்றது.
சபரி ஐயப்ப சீரடி சாவி அறக்கட்டளை ஸ்தாபகத் தலைவரும், வட மாகாண சபரிமலை யாத்திரிகர்கள் இணையத்தலைவருமான தவத்திரு.தரணீஸ்வர குருசுவாமி தலைமையில் இன்று 11.10.2025 நடைபெறுகிறது.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன், குரு சுவாமிகள் உள்ளிட்ட ஐயப்ப பக்தர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.