2025ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், மாவட்டத்தில் 102387பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன், 108வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
40 வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், 1450 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகளுடன் பேரூந்துக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டன.
நாளைய தினம் (06.05.2025) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முழங்காவில் வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லும் முதலாவது பேரூந்து இன்றைய தினம் (05.05.2025) காலை 08.30 மணிக்கு புறப்பட்டுச்சென்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.S.முரளிதரன் அவர்களும், உதவித் தேர்தல் ஆணையாளர் திரு.வே. சிவராசா அவர்களும் இதன்போது இணைந்து அனுப்பிவைத்தனர்.
தொடர்ச்சியாக ஏனைய வாக்களிப்பு நிலையங்களுக்கான பேரூந்துகளை அனுப்பும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
