மன்னாரைச் சேர்ந்த ஜனாப் M.I. ஹபீல் அவர்களுக்கு ‘சமுர்த்தி பிராஜா ஹரி சர விருது 2025
சமூக நலனில் சிறந்த பங்களிப்பு செய்த தலைவர்கள் மற்றும் சமுர்த்தி அமைப்பின் முன்னேற்றத்திற்கு அயராது உழைக்கும் ஆளுமைகளை கெளரவித்து விருதுகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றது.
சிறப்பான முறையில் இடம்பெற்ற குறித்த விழாவில், முன்னாள் G’80 Welfare Association அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் மற்றும் மன்னார் மாவட்ட சமுர்த்தி பிரதேச மட்டத் தலைவருமான எருக்கலம்பிட்டியை சேர்ந்த ஜனாப் M.I. ஹபீல் அவர்களுக்கு “சமுர்த்தி பிராஜா ஹரி சர விருது – 2025” வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இவ்விருது, சமூக நலனில் சிறந்த பங்களிப்பு செய்த தலைவர்கள் மற்றும் சமுர்த்தி அமைப்பின் முன்னேற்றத்திற்கு அயராது உழைக்கும் ஆளுமைகளுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஜனாப் M.I. ஹபீல் அவர்கள், பல ஆண்டுகளாக மன்னார் மாவட்ட மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக அயராத முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளதுடன், அவரின் வழிகாட்டுதலில் பல சமூக நலத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த விழாவில் அமைச்சர்கள், அரசுத் தலைவர்கள், சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஜனாப் M.I. ஹபீல் அவர்கள் விருது பெற்றதைத் தொடர்ந்து, “இவ்விருது எனது தனிப்பட்ட சாதனை அல்ல; மன்னார் மக்களுக்காக அர்ப்பணித்த எனது அணியின் கடின உழைப்புக்கான அங்கீகாரம் இது,” எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


