ஜூட் சமந்த
வயலுக்கு செல்லும் உடைந்த கால்வாய் மீண்டும் திருத்தப்படும்வரை விவசாராயத்தை மேற்கொள்வதற்காக குழாய் அமைப்பு மூலம் தண்ணீரைப் பெற தப்போவ பகுதியில் உள்ள விவசாயிகள் தீர்மானித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, தப்போவ நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் அதிகபட்சமாக திறக்கப்பட்டன. வான் கதவுகள் வழியாக தண்ணீர் பாய்ந்ததால், தப்போவ நீர்த்தேக்கத்தின் தெற்குக் கரையில் உள்ள வயல் கால்வாய் ஒன்றில் சுமார் 07 அடி கான்கிரீட் அடுக்கு உடைந்தது. உடைந்த இடத்திலிருந்து பாயும் நீரால் சுமார் 75 ஏக்கர் வயல் முற்றிலும் அழிக்கப்பட்டது.
சேதமடைந்த வயல்களில் உடனடியாக மீண்டும் பயிரிடப்பட வேண்டும் என்றாலும், உடைந்த வயல் கால்வாய் ஒரு தடையாக இருந்தது. உடைந்த வயல் கால்வாய் கட்டமைப்புகள் மீண்டும் அமைக்கப்படும் வரை தண்ணீரைப் பெற பிளாஸ்டிக் குழாய்களைப் பயன்படுத்த விவசாயிகள் தற்போது முடிவு செய்துள்ளனர்.
அந்தவகையில் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, கருவலகஸ்வெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் திரு. நிமல் ஜெயசிறி பண்டாரவின் தலைமையில் தண்ணீரைப் பெறுவதற்குத் தேவையான பிளாஸ்டிக் குழாய்களை நிறுவும் பணி நிறைவடைந்துள்ளது.
எனவே உடைந்த கால்வாய்களை அரசாங்கம் புனரமைக்கும் வரை காத்திருக்காமல், மாற்று வழியைத் தேடிய தப்போவா விவசாயிகள், சமீபத்தில் சேதமடைந்த நெல் வயல்களில் மீண்டும் பயிரிடத் தொடங்கியுள்ளமை அனைவரின் பாராட்டையும் பெறவைத்துள்ளது.


