அடுத்த மாதம் (ஜுன்-01) முதல், பொதுமக்கள் தமக்கான கடவுச் சீட்டை (Passport) பெற்றுக்கொள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வர வேண்டியதில்லை என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதல் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தை, ஒன்லைன் ஊடாக அனுப்பி வைக்க முடியும்.
அத்துடன் அதற்கான கட்டணத்தை வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதுடன், உங்கள் பிரதேசத்திலுள்ள பிரதேச செயலக காரியாலயங்களில், கைவிரல் அடையாளங்களையும் பதிவு செய்யலாம் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 03 நாட்களின் பின், பதிவுத் தபால் (Registered Post) மூலம், விண்ணப்பதாரரின் வீட்டுக்கே, கடவுச்சீட்டு அனுப்பிவைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.