‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ திட்டத்தின் கீழ், பேரிடரால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு மற்றும் புதிய வீடுகள் கட்டுமானத் திட்டத்தின் தொடக்க விழா குருநாகல் மாவட்டத்தின் நிகவெரட்டிய பிரதேச செயலகத்தின் விதிக்குலிய கிராமத்தில் நடைபெற்றது.
‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப தொடங்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றாக இந்த வீடுகளை கட்டும் 5M திட்டம் கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக மற்றும் வடமேற்கு ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய தலைமையில் நடைபெற்றது.
குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மற்றும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமேற்கு தலைமைச் செயலாளர், குருநாகல் மாவட்ட செயலாளர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்
2026 ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் கட்டப்படும் ஆண்டாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடமேற்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு






