வெடிக்காத நிலையில் கை குண்டு இனம் காணப்பட்டுள்ளது
தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் நேற்று 13.10.2025 வெடிக்காத நிலையில் கை குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தனியார் காணியினை துப்புரவு செய்துக்கொண்டிருந்த பொழுது வெடிக்காத நிலையில் கை குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தருமபுர போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த தர்மபுரம் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி நீதிமன்ற அனுமதியின் பின்னர் அப்பகுதியில் இருந்து குண்டினை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.
