ஜூட் சமந்த
கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வேறு இடத்திற்கு கொண்டு செல்ல தயாராக இருந்த ஒருதொகை பீடி இலைகள் மற்றும் ரசாயனங்கள் அடங்கிய பொட்டலங்களை வென்னப்புவ பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
வென்னப்புவ, வைக்கால பகுதியில் இன்று 9 ஆம் தேதி அதிகாலை இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.
வென்னப்புவ – அளுத்தோட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சோதனை நடவடிக்கையின்போது 17 பொலிலிதீன் பைகளில் அடைக்கப்பட்டிருந்த 395 கிலோகிராம் பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், அதற்குள்ளே ரகசியமாக 20 பொலிதீன் பொட்டலங்களில் அடையாளம் தெரியாத ரசாயனப் பொருள் என சந்தேகிக்கப்படும் 60,000 சிறிய பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
பீடி இலைகள் மற்றும் ரசாயனங்கள் அடங்கிய பொலிதீன் பைகள், 04 சிறிய மீன்பிடி படகுகளில் கொண்டு வரப்பட்டு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ள சந்தேக நபர், அந்த பீடி இலைகளை எடுத்துச் செல்லும் வரை மட்டுமே தாம் பாதுகாத்து வந்ததாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவின் வென்னப்புவ பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
போலீசார் பறிமுதல் செய்த பீடி இலைகள் கட்டுநாயக்க சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


