பல பகுதிகளில் வெப்பநிலை நாளை (27) கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்று (26) மாலை அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் அளவிற்கு எச்சரிக்கை மட்டத்தில் இருக்கக்கூடும் என்று அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.