2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையதளங்களுக்கு பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிடலாம் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 2312 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.
இந்த பரீட்சைக்கு மொத்தமாக 274,361 பரீட்சாத்திகள் தோற்றியதுடன், அதில் 222,774 பாடசாலை பரீட்சாத்திகளும் அடங்குவர்.
அதன்படி, 177,588 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதில் 149,964 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 27,624 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவர்.
அதேநேரம் 456 பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், பரீட்சையின் பெறுபேறுகளை மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்களை மே மாதம் முதலாம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.
