டெங்கு நோய் தொற்று அதிகமாக பரவியுள்ள கம்பஹா மாவட்டத்துக்கு டெங்கு நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த விசேட குழுவொன்றை இன்று அனுப்பவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நேற்றைய தினம் வரையில், நாட்டில் 31,098 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்தநிலையில், மேல் மாகாணத்தில் அதிகளவானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், கடந்த ஆண்டு மே மாதம் வரையில் இலங்கையில் 24 ஆயிரத்து 206 டெங்கு நோயளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த வருடத்தில், டெங்கு நோய் தொற்றின் 3 ஆம் திரிபே இதற்கு பிரதான காரணம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.