Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவேட்டைக்கு சென்ற இறைச்சிக்கடை உரிமையாளர் சடலமாக மீட்பு!

வேட்டைக்கு சென்ற இறைச்சிக்கடை உரிமையாளர் சடலமாக மீட்பு!

  • மஹவெவவில் மர்ம மரணம்: காட்டுப்பன்றி வேட்டைக்கு சென்ற இறைச்சிக்கடை உரிமையாளர் சடலமாக மீட்பு!
  • ஹோட்டல் அருகே விழுந்து கிடந்த நபர்: சடலத்தின் அருகில் சிக்கிய கம்பிப்பொறி!
  • வலஹாபிட்டியவில் அதிர்ச்சி: வேட்டைக்குச் சென்றவருக்கு நேர்ந்த விபரீத முடிவு!

ஜுட் சமந்த

மஹவெவ – வலஹாபிட்டிய பகுதியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு அருகில், கடந்த 7 ஆம் திகதி மாலை வேளையில் தரையில் வீழ்ந்து கிடந்த நபரின் உடலைக் கண்டு அப்பகுதி மக்கள் உறைந்து போயினர். காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காகச் சென்ற நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர் மஹவெவ, மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 51 வயதான விக்ரமநாயக்க முதியன்சேலாகே நிஸ்சங்க மிலான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் கிடந்த இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்று தீவிர சோதனைகளை முன்னெடுத்த போது, காட்டுப்பன்றிகளைச் சிக்க வைப்பதற்காக அவர் கொண்டு சென்ற ஆபத்தான கம்பிப் பொறி ஒன்றும் சடலத்திற்கு அருகிலேயே வீசப்பட்டுக் கிடந்தமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின்படி, உயிரிழந்த நபர் மஹவெவ – மட்டகொட்டுவ பகுதியில் பன்றி இறைச்சிக் கடையொன்றை நடத்தி வந்துள்ளார். வழக்கமான இறைச்சிப் பன்றிகளுக்கு அப்பால், இரகசியமாக காட்டுப்பன்றிகளையும் வேட்டையாடி அதிக விலைக்கு விற்று வந்த இவர், வலஹாபிட்டிய ஹோட்டல் வளாகத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு பன்றிகளைப் பிடிப்பதற்காக அடிக்கடி சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

வழமை போல அன்றும் வேட்டைக்குச் சென்றவருக்கு அங்கே என்ன நடந்தது, அவர் மாரடைப்பால் உயிரிழந்தாரா அல்லது அவரது சொந்தப் பொறி அல்லது மின்சார விபத்தில் சிக்கினாரா என்ற பல்வேறு மர்மக் கேள்விகள் எழுந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த மாரவில பதில் நீதவான், 7 ஆம் திகதி இரவே சம்பவ இடத்திற்கு நேரடியாக வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு முதற்கட்ட நீதித்துறை விசாரணைகளை முன்னெடுத்தார். அதனைத் தொடர்ந்து, உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தை வெளிக்கொணரும் வகையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மாரவில பொலிஸார் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular