அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் காட்டு தீ பரவல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், தீப்பரவலினால் ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர மவுயி (Maui) தீவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரை நகரான லஹய்னாவின் 80 சதவீதமான பகுதிகள் தீயினால் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் ஆரம்பமான காட்டு தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தீயணைப்பு படையினர் முயன்று வருகின்றனர்.
குறித்த பிரதேசத்தில் கடுமையான புயல் வீசுவதனால், காட்டு தீ தொடர்ந்தும் புதிய பிரதேசங்களுக்கும் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.