Monday, April 21, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeTechnology10ஜி சேவையை அறிமுகப்படுத்தியது சீனா!

10ஜி சேவையை அறிமுகப்படுத்தியது சீனா!

10ஜி இணைய சேவையை சீனா அறிமுகம் செய்துள்ளது. பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக இருக்கிறது.

இணைய சேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு சில நிமிடங்கள் இணைய சேவை தடைபட்டாலே வேலைகள் அனைத்தும் நின்று போகும் அளவுக்கு, இணையம் உலகை ஆக்கிரமித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைத்து வேலைகளுமே இணைய சேவையை நம்பியே இருக்கிறது.இணைய பயன்பாட்டை பொறுத்தவரை, அதன் வேகம் முக்கியமான ஒன்று. 2ஜி யில் தொடங்கிய இணைய சேவை, 3ஜி, 4ஜி என அதிகரித்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகெங்கும் இப்போது 5ஜி சேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் மூலை முடுக்கெல்லாம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் பணி நடக்கிறது. இந்நிலையில்,ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10ஜி ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பகுதி தலைநகர் பீஜிங்கிற்கு அருகில் அமைந்துள்ளது. இது சீனாவின் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த 10ஜி இணைய சேவையில், பதிவிறக்க வேகம் 9834 Mbps, பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக உள்ளது. இந்த வளர்ச்சி சீனாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 5ஜி சேவையே தற்போது தான் அறிமுகம் ஆகியுள்ள நிலையில், சீனாவில் 10ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular