இந்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000 ஐயும் தாண்டியுள்ளது.
2025 மே மாதம் 13 ஆம் திகதி வரை 956,639 சுறுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பை காட்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த மாதம், இந்தியா, ஜேர்மன் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய மூன்று நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், சீீனா, அவுஸ்திரேலியா, பங்கலாதேஷ், பிரான்ஸ், இரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் கடந்த மாதம் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
