மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் பதவிகளுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் சுகாதார அமைச்சில் நடைபெற்றுள்ளன.
அண்மையில் நடைபெற்ற போட்டி பரீட்சையில் தகுதி பெற்றவர்களுக்காக இந்த நேர்காணல்கள் நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு 294 பேரையும், பிசியோதெரபிஸ்ட் பதவிக்கு 200 பேரையும் பணியமர்த்த சுகாதார அமைச்சு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, இன்று நடைபெற்ற நேர்காணலில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் அந்தப் பதவிகளுக்கு அமைவான மாற்றீடு மற்றும் சேர்க்கை கற்கைநெறிகளுக்காக ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்.