Wednesday, January 22, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal News54 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

54 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் 54 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

இன்று (19) மு.ப.9.00 மணியளவில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நிருவகிக்கப்படும் பிரதான 73 நீர்த்தேக்கங்களில் 54 நீர்த்தேக்கங்களில் வான் பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் ( நீர் முகாமைத்துவம்) எச். எப். பி. எஸ். டி. ஹேரத் தெரிவித்தார்.

இவற்றில் அம்பாறை மாவட்டத்தின் 8, அனுராதபுரம் மாவட்டத்தின் பிரதான 10 நீர்த் தேக்கங்கள், பதுளை மாவட்டத்தின் 6 நீர் நிலைகள், மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் தலா 4 பிரதான குளங்களும், குருணாகல் மாவட்டத்தின் 5 குளங்களும், புத்தளம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தலா 2 பிரதான நீர்த்தேக்கங்களும், கண்டி மாவட்டத்தின் 3 பிரதான நீர்நிலைகளும், காலி மாவட்டத்தின் 1 நீர்த்தேக்கமும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் பிரதான நீர் நிலைகளுமாக மொத்தம் 54 நீர் நிலைகளில் வான் பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் நடுத்தர அளவிலான குளங்கள் 43 இற்கும் அதிகமானவற்றில் வான் பாய்வதுடன், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்த் தேக்கங்களில் சேமித்து வைக்கக்கூடிய முழு நீரின் கொள்ளளவில் 93% வீதத்திற்கும் அதிகமானவற்றை தற்போது சேமித்து வைப்பதற்கு முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் விபரித்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular