6 ஆம் தர ஆங்கிலப் பாடத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பொருத்தமற்ற வாசகம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்.
தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) தயாரிக்கப்பட்டு, தற்போது அச்சிடப்பட்டுள்ள 6 ஆம் ஆண்டு ஆங்கில மொழிப் பாடத்திற்கான ஒரு தொகுதியில் (Module), பொருத்தமற்ற இணையதளமொன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாடு தொடர்பில் ஆராயப்பட்டு, அந்த முறைப்பாடு சரியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த கற்றல் தொகுதியை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் உடனடி விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இது குறித்து நாளை (31) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது.


