இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் நிகழ்ந்த வீதி விபத்துகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
அதன்படி, 1,274 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 1,351 பேர் உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 1,166 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 1,222 பேர் உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டை விட இந்த வருடத்தில் வீதி விபத்துகள் அதிகம் என காவல்துறை தெரிவித்துள்ளது.