கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் 66 பேரை தெரிவு செய்வதற்காக 659 பேர் போட்டி – மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராஜா தெரிவிப்பு.
இன்றைய தினம் கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்பு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில் இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தில் 102387பேர் இந்த உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.கரைச்சி பிரதேச சபையில் 35உறுப்பினர்களளை தெரிவு செய்வதற்காக 342பேர் போட்டியிடுவதாகவும் பச்சிலைபள்ளி பிரததேச சபையில் 13பேரை தெரிவு செய்வதற்காக 128.பேர் போட்டியிடுவதாகவும் பூநகரி பிரதேச சபையில் 18பேரை தெரிவு செய்வதற்காக 189பேர் போட்டியிடுவதாக தெரிவித்தார்.