கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் ஏழாம் யூனிட் பகுதியில் அமைந்துள்ள 70 வருடங்களுக்கு மேலாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள வீதியை புனரமைக்கும் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டன.
பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்த மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் வீதி புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் 21.06.2025 தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இவ் வீதியானது 35 மில்லியன் ரூபா செலவில் நிரந்தர தார் வீதியாக அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக இன்றைய தினம் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் மோகன் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கலத்தினர், கண்டாவலைப் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மக்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
