மன்னார் மாவட்ட விளையாட்டு கட்டிட தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம் (swimming pool) நாளை திறந்துவைக்கப்பட உள்ளது.
மன்னார் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த நீச்சல் குளம், விளையாட்டு அபிவிருத்தி துறையின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் ரூ.94 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நானாட்டம் பிரதேச பிரிவின் நாராவில குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந் நீச்சல் குளம், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் நாளை பிற்பகல் 2.00 மணியளவில் திறந்துவைக்கப்பட உள்ளது.
இதேவேளை புனித சேவியர் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட உள்ள, உள்ளக விளையாட்டு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவும் நாளைய தினம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.