முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்திற்கு மூன்று மாடி கட்டிடம் ஒன்றின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வேளையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் குறித்த கட்டிட நிர்மாணப்பணிகள் இடை நடுவில் கைவிடப்பட்டது.
இதனால் மாணவர்களுக்கான ஏற்பட்டுள்ள வகுப்பறை பற்றாக்குறை தொடர்பாக புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம். ரிஜாஜ் அவர்களுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, புத்தளம் பிரதேச சபை உறுப்பினரினால் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் கவனத்திற்கு குறித்த கொண்டுசெல்லப்பட்டது.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் குவைத் நாட்டின் அல் நூரி சரிடி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்திற்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இடை நடுவில் கைவிடப்பட்ட குறித்த மூன்று மாடி கட்டிட கட்டுமானப்பணிகள் மிக விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்கான சகல நடடிக்கைகளையும் தாம் துரிதப்படுத்துவதாகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மேலும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானத்தையும் ( Volleyball Court ) பார்வையிட்டதுடன் மேலதிக குறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.
குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.