அமெரிக்க டொலரொன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து உயர்வடைந்து வருகின்றது.
நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட பணவீக்க உயர்வினால் கடந்த காலங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துசென்றது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 343.97 ரூபாவாகவும், அதன் விற்பனைப்பெறுமதி 356.73 ரூபாவாகவும் சாதகமான மட்டத்தில் பதிவாகியிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று (03) ரூபாவின் பெறுமதி கணிசமானளவினால் உயர்வடைந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 334.50 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 348.03 ரூபாவாகவும் நேற்று பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.