இதன் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவுறுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நகர திடக்கழிவு பிரச்சினைக்கு தீர்வு காண, சுகாதாரமான குப்பை கிடங்கு வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த குப்பை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் அருவக்காலு குப்பைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன்படி, கொழும்பு நகரில் நாளாந்தம் சேகரிக்கப்படும் சுமார் 1,200 மெற்றிக் டன் குப்பைகளை களனி, வனவாசலையில் இருந்து சுமார் 170 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள புத்தளம், அருவக்காலு குப்பைத் தளத்திற்கு தொடருந்து மூலம் கொண்டு செல்வது இந்தத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.
அருவாக்கலு குப்பை மேடு மற்றும் களனி, வனவாசலை கழிவுப் பரிமாற்ற நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், சீன நிறுவனமான சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனமும், சீனாவின் சவுத்வெஸ்ட் முனிசிபல் இன்ஜினியரிங் அண்ட் ரிஸேச் இன்ஸ்டிடியூட் ஓப் சைனா நிறுவனமும் அதன் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தக்கழிவுகள் அருவாக்கலு கழிவுநீர் மையத்தில் கொட்டப்பட்டு, அதன்பின் அருகில் உள்ள சுகாதாரக் குப்பை கிடங்கில் அப்புறப்படுத்தப்படுகிறது.
நாளொன்றுக்கு அதிகபட்சமாக இரண்டு தொடருந்து பயணங்களை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.