இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சேனல் ஐ (SLRC) லைக்கா குழுமத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
ரூபவாஹினி ‘சேனல் ஐ’ அலைவரிசையை லைக்கா நிறுவனத்திற்கு விற்பதற்கென ஊடகத்துறை அமைச்சர் பந்துலவினால் முன்வைக்கப்பட்ட யோசனை அமைச்சரவையில் இன்று நிராகரிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை இறுதியில் இருவரும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு மாதம் ஒன்றுக்கு 25 மில்லியன் அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின.
அமைச்சின் ஒப்புதலின்படி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தப் பின்னணியிலேயே ‘சேனல் ஐ’ அலைவரிசையை லைக்கா நிறுவனத்திற்கு வழங்கும் யோசனையை அமைச்சரவை நிராகரித்தது.