Friday, November 22, 2024
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகாதல் ஜோடியின் லீலையால் எரிந்த குருநாகல் மலை பகுதி

காதல் ஜோடியின் லீலையால் எரிந்த குருநாகல் மலை பகுதி

குருநாகல் எத்துகல மலையைப் பார்க்கச் சென்ற காதல் ஜோடி வீசிய தீக்குச்சியால் எத்துகல பாதுகாப்பு வனப்பகுதியின் சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.

 

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட காதர்கள் இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் (19) உத்தரவிட்டுள்ளது.
குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எத்துகல மலை உச்சியில் உள்ள புத்தர் சிலையை பார்வையிடுவதற்காக காதலர்கள் நேற்று காலை சென்றுள்ளனர்.
குறித்த இளைஞனின் சட்டைப் பையில் தீப்பெட்டி ஒன்று காணப்பட்டதையடுத்து குறித்த யுவதி, அது தொடர்பில் காதலனிடம் விசாரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், சிறுமி தீப்பெட்டியில் இருந்த இரண்டு தீக்குச்சிகளை கொளுத்தி, அப்பகுதியில் வீசியதால் தீப்பிடித்துள்ளது.
இதனைக் கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, குருநாகல் மாநகரசபை ஊழியர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டுள்ளது.
தீயினால் அழிவடைந்த பிரதேசம் 03 ஏக்கர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீப்பரவலை தொடர்ந்து கீழ் பகுதிக்கு ஓடிய காதலர்கள் இருவரையும் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட காதலர்கள் 24 மற்றும் 20 வயதுடைய மாத்தளை மற்றும் மஹவ பிரதேசத்தில் சேர்ந்தவர்களாவர்.
குறித்த இளைஞர் இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Most Popular