இந்தாண்டுக்குள் மூன்றாம் நிலை மென்பொறியாளர்களை நீக்கப்போவதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
உலகளவில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை நீக்கிவிட்டு, மாற்றாக செயல் நுண்ணறிவை (ஏஐ) பணியில் சேர்க்க பல்வேறு நிறுவனங்களும் திட்டமிட்டு வருகின்றன. வேலைச் சந்தையில் ஏஐ-யின் தாக்கம், அதன் இன்றியமையாமை சிந்திக்கத்தக்கதே. அந்த வகையில், மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கும் தனது நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளார்.
ஜூக்கர்பெர்க்கும் தனது நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்குள் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், முகநூல் செயலிகளில் பணிபுரியும் நடுத்தர அல்லது மூன்றாம் நிலை மென்பொறியாளர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக ஏஐ தொழில்நுட்பத்தைச் சேர்க்க திட்டமிட்டுள்ளார்.