தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் அரசாங்கம் நிறைவேற்றாமல் தடுமாறிக் கொண்டிருப்பதாக வேலுசாமி இராதாகிருஸ்ணன் கூறினார்.
அரசாங்கத்தின் முதிர்ச்சியின்மையே சவால்களை முகங்கொடுக்க முடியாமல் உள்ளமைக்கு காரணம் எனவும் அரசாங்கத்தை நடத்துவதற்கு புதுமுகங்கள் மாத்திரம் போதாது எனவும் குறிப்பிட்டார்.
எனவே முதிர்ச்சியடைந்தவர்கள் சிலரும் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.