நொரச்சோலை ஆலங்குடா கடற்பரப்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையின் போது தீவுக்குள் கடத்த முயன்ற சுமார் 496 கிலோகிராம் உலர் இஞ்சி மற்றும் 515 ஜோடி காலணிகள் கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கையின்போது டிங்கி படகு ஒன்றுடன் 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான பொருட்களின் ஊடுருவலைத் தடுப்பதற்காக தீவின் கரையோரப் பகுதிகளில் ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோதே குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது வடமேற்கு கடற்படை கட்டளையில் SLNS விஜயா மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது 515 ஜோடி செருப்புகள் சுமார் 496 கிலோ எடையுள்ள 16 சாக்குகளில் மறைக்கப்பட்டிருந்ததுடன், உலர் இஞ்சி 06 பொதிகளில் மறைக்கப்பட்டிருந்தன.
இந்த கடத்தல் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட டிங்கி படகும், அதனுடன் தொடர்புடைய 02 சந்தேக நபர்களையும் கற்பிட்டி கடற்படையினர் கைப்பற்றினர்.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 33 மற்றும் 46 வயதுடைய கல்பிட்டியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 02 சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.