கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ஜெர்மன் நாட்டு பிரஜையும் திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயம் இன்று (03) உயிரிழந்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
குறித்த விடுதியில் தங்கியிருந்த ஒரு பிரித்தானிய பெண் மற்றும் ஜெர்மன் தம்பதியினருக்கும் திடீரென வாந்தி ஏற்பட்டதால், அவர்களை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் 24 வயதான பிரித்தானிய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம், உணவு விஷமானதால் ஏற்பட்டதா? அல்லது கொலையா? என்பதை அறிய அடுத்தக்கட்ட விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், அதற்காக மேலும் சில வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்ற நிலையில் ஜெர்மன் நாட்டு பிரஜையும் இன்று உயிரிழந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.