77 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக இன்று (04) வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலில் தேசிய கொடியேற்றத்துடன் இஸ்லாமிய சமய நிகழ்வுகள் இன்று அதிகாலை இடம்பெற்றது.
இதில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி ஆகியோர் விஷேடமாக பங்கேற்றனர்.
குறித்த நிகழ்வில் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றதுடன், 77 ஆவது சுதந்திர தினத்தை மையப்படுத்தி நாட்டின் ஒருமைப்பாடு, எதிர்கால முன்னெடுப்பு மற்றும் சுபீட்சம் ஆகியன பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவலகள் திணைக்கள பணிப்பாளர் எம். எஸ். எம் நவாஸ் உட்பட திணைக்கள உத்தியோகத்தர்கள், ஜம்மிய்யதுல் உலமா சபை அங்கத்தவர்கள், வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாகிகள் மற்றும் பலர் பங்குபற்றியிருந்தனர்.