காஷ்மீர் உட்பட இந்தியாவுடனான அனைத்துப் பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு காஷ்மீர் நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீரில் உள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், காஷ்மீர் மக்களுக்கு அனைத்து விதமான ஆதரவையும் பாகிஸ்தான் தொடர்ந்து வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய உறுதிமொழிக்கு அமைய, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை இந்தியா ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
