புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலைக்கு ஒரு தொகை விருந்தினர் இருக்கைகள் பாடசாலை பழைய மாணவர்கள் சங்கத்தினரால் இன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.
பாடசாலை அதிபர் ஜனாப் S.M. ஹுசைமத் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தினரின் பூரண அனுசரணையில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபா பெறுமதியான 10 விருந்தினர் இருக்கைகள் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலையில் நீண்ட கால தேவையாக இருந்துவந்த விருந்தினர் இருக்கைகள், பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை அடுத்து குறித்த கதிரைகள் பாடசாலையின் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


