யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தின் ஒரு முற்சியாக விவசாயிகளையும் பல்கலைக்கழக மாணவர்களையும் இணைத்து விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு காணும் விவசாய மாநாடு இன்று இடம்பெற்றது.
எக்ரி டெக் 2025 (Agri tech 2025) விவசாய மாநாடு எனும் தொனிப்பொருளில் குறித்த மாநாடு இன்று யாழ் பல்கலைக்கழக விவசாய பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கே.பகீரதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பல்கலைக்கழக விவசாயம் சார்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வடமாகாண விவசாயப்பணிப்பாளர் ,விவசாய துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், விவசாய துறைசார்ந்த நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், விவசாயிகள், என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் புத்தாக்க கண்காட்சியும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்




