முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விஸ்வநாதர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வளுனர் திறனாய்வுப் போட்டி பள்ளி முதல்வர் திரு யோகராசா அவர்களின் தலைமையில் நேற்று 25.02.2025 மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் ஒரு அங்கமாக வருடம்தோறும் பாடசாலைகளில் இல்ல மெய்வளுனர் திறனாய்வுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் விசுவமடு, விஸ்வநாதர் வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வளுனர் திறனாய்வுப் போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்கள் தமது விளையாட்டு திறமையை காண்பிக்கும்வண்ணம், போட்டிகளில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் 50 மீட்டர் 75 மீட்டர் ஓட்டங்கள் என பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கானி ஜெயகாந்த், ஆரம்ப உதவி கல்வி பணிப்பாளர் திருக்குமரன், மதகுருமார்கள், இராணுவத்தினர், அயல் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





கிளிநொச்சி செய்திகளுக்காக ஆனந்தன்