எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (2025) புத்தளம் மாநகர சபைக்கான கட்டுப்பணம் ஜவுபர் மரைக்கார் தலைமையிலான அணியினால் சற்று முன்னர் (14.03.2025) புத்தளம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள உதவி தேர்தல்கள் ஆணையாளர் காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக செலுத்தப்பட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (2025) புத்தளம் மாநகர சபைக்கான கட்டுப்பணம் மாத்திரமே தற்போது செலுத்தப்பட்டுள்ளதாகவும், புத்தளம் பிரதேச சபைக்கான கட்டுப்பணம் விரைவில் செலுத்தப்படும் எனவும் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
புத்தளம் மாநகர சபைக்கான வேட்பாளர் பட்டியல் தயார்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், புத்தளம் பிரதேச சபைக்கான வேட்பாளர் பட்டியல் தயார்படுத்தும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வில் சகோ. ஜவுபர் மரைக்கார், நஸ்ஹத் மரைக்கார் மற்றும் ஆசிரியர் பாரூக் பதீன் ஆகியோர் கலந்து கொண்டதுடன், நியமனப் பத்திரம் தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் பெற்றுகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.